×

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில் உலா வந்த சிறுத்தை: வீடியோ வைரல்

கோவை: கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள தன்னாசியப்பன் கோயில் வீதியில் 2 வாரத்துக்கு முன்பு சிறுத்தை ஒன்று சுற்றியது. வனத்துறை சார்பில் அங்கு கூண்டு வைக்கப்பட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சுகுணாபுரத்தில் கல்லூரி வளாக பகுதியில் சிறுத்தை வந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த சிறுத்தை நாய் ஒன்றை கடித்து கொன்று சிறிது சாப்பிட்டு போட்டு சென்றுள்ளதாக தெரிகிறது. இறந்து கிடந்த நாய் மற்றும் ரத்தம் அங்கே கொட்டிக்கிடந்தது. கல்லூரி வளாகத்துக்குள் சிறுத்தை உலா வந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. சிறுவர்கள், பெண்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சிறுத்தை சுற்றி கொண்டிருப்பதால் அவர்களை சிறுத்தை தாக்கும் அபாயம் உள்ளது. நள்ளிரவு நேரத்தில் இருந்து அதிகாலை  வரை இந்த சிறுத்தை ஊருக்குள் வலம் வருகிறது. எனவே உடனடியாக சிறுத்தையை பிடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினர் கூண்டு வைத்துள்ள இடத்திற்கு மீண்டும் சிறுத்தை செல்லவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்….

The post கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில் உலா வந்த சிறுத்தை: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Sukunapuram ,Coimbatore ,Thannasiyappan ,road ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...