×

விரைவில் மீண்டும் நம்பர் 1: சபலென்கா உற்சாகம்

ஜெனீவா: வுஹான் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்கா (26வயது, 2வது ரேங்க்), விரைவில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. வுஹான் ஓபனில் சபலென்கா ஏற்கனவே 2018, 21019ல் பட்டம் வென்றிருந்தார். கொரோனா தொற்று காரணமாக இந்த தொடர் 2020-2023 வரை 4 ஆண்டுகளுக்கு நடத்தப்படவில்லை. எனவே நடப்பு சாம்பியனாகக் களமிறங்கிய அவருக்கு சமீபத்திய வெற்றி ஹாட்ரிக் சாதனையாகவும் அமைந்தது.

இந்த வெற்றியால், சபலென்கா டபுள்யூடிஏ மகளிர் ஒற்றையர் தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. முதலிடத்தில் உள்ள இகா ஸ்வியாடெக் (9785 புள்ளி, போலந்து) சபலென்காவை விட 69 புள்ளிகள் மட்டுமே அதிகம் பெற்றுள்ளார். அவர் வுஹான் ஓபனில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. டாப் 5 வீராங்கனைகள்: 1.ஸ்வியாடெக் (9785), 2.சபலென்கா (9716), 3.கோகோ காஃப் (5973), 4.ஜெஸிகா பெகுலா (5785), 5.எலனா ரைபாகினா (5373).
* ஏடிபி ஆண்கள் ஒற்றையர் தரவரிசயைில் யானிக் சின்னர் (இத்தாலி), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), அலெக்சாண்டார் ஸ்வெரவ் (ஜெர்மனி), நோவாக் ஜோகோவிச் (செர்பியா), டானில் மெத்வதேவ் (ரஷ்யா) டாப் 5ல் நீடிக்கின்றனர்.

The post விரைவில் மீண்டும் நம்பர் 1: சபலென்கா உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Sabalenka ,Geneva ,Belarus ,Aryna Sabalenka ,Wuhan Open women ,Wuhan Open ,Dinakaran ,
× RELATED பருவநிலை மாற்றம் தமிழக அரசு...