மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசராவின் ஜம்போ சவாரிக்கு அழைத்து வரப்பட்ட அபிமன்யு தலைமையிலான யானைகள் மீண்டும் வனப்பகுதியின் முகாம்களுக்கு வழி அனுப்பிவைக்கப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவின் முக்கிய நிகழ்வான தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மனை வைத்து நடத்தப்படும் ஊர்வலம் கடந்த சனிக்கிழமை வெகு விமரிசையாக நடந்தது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் வனப்பகுதியில் இருந்து சம்பிரதாயப்படி பூஜைகள் செய்து யானைகள் மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டது.
அவைகளுக்கு பயிற்சி அளித்து ஜம்போ சவாரியை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2 நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் நேற்று மீண்டும் கேப்டன் அபிமன்யு தலைமையிலான யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நேற்று அரண்மனை வளாகத்தில் அர்ச்சகர் பிரகலாத்ராவ் மூலம் யானைளை வரிசையாக நிற்கவைத்து அவைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது அவைகளுக்கு பிடித்தமான கரும்பு, வெல்லம், தேங்காய், வாழைப்பழங்கள் கொடுக்கப்பட்டது.
பூஜைக்கு பின்னர் யானைகளை லாரியில் ஏற்றி வனப்பகுதி கொண்டு சென்றனர். இதில், ஏகலைவா யானை லாரியில் ஏறுவதற்கு முரண்டு பிடித்தது. ஆனால், பாகன்கள், காவாடிகள் அதை சமாதானம் செய்து லாரியில் ஏற்றினர். அபிமன்யு தலைமையிலான யானைகளின் வழியனுப்பும் நிகழ்ச்சியை பார்க்க பொதுமக்கள் அதிகமாக கூடியிருந்தனர். அப்போது, யானை தும்பிக்கையை மேலே தூக்கியது செய்கையை காட்டியபடி வனப்பகுதிக்கு புறப்பட்டது. அந்த யானைகளும் பாகன்கள், காவாடிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் சென்றனர்.
The post மைசூரு தசரா விழாவில் பங்கேற்ற யானைகள் முகாமுக்கு திரும்பின: சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன appeared first on Dinakaran.