×
Saravana Stores

புலியை பிடிக்க தேடுதல் வேட்டை

குடகு: குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவின் ஸ்ரீமங்களா ஹோப்ளியில் புலி நடமாட்டம் அதிகரித்த பசுக்களை வேட்டையாடியது.  இதில், ஒரு பசு இறந்து மற்றொன்று படுகாமடைந்தது. தகவல் அறிந்து விராஜ்பேட்டை பேரவை தொகுதி எம்எல்ஏ ஏ.எஸ்.பொன்னண்ணா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். பசுவை பறிக்கொடுத்த கிஷனுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கினார். இந்தநிலையில், எம்எல்ஏவின் உத்தரவின் பேரில் ஸ்ரீமங்களா ஹோப்ளியின் வெஸ்ட் நெம்மலே கிராமத்தில் புலியை பிடிக்க மத்திகோடு வளர்ப்பு முகாமில் இருந்து அஜய் மற்றும் ஸ்ரீராம் ஆகிய வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுடன் மயக்க மருந்து நிபுணர் டாக். சிடியப்பா மற்றும் ஷார்ப் ஷூட்டர் ரஞ்சன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதற்கிடையில், வெஸ்ட் நெம்மலேயில் பசுவை தாக்கி கொன்ற இடத்தில் கூண்டு வைத்து இறந்த பசுவை வைத்துள்ளனர். இந்த தேடுதல் பணியில் மடிக்கேரி வனப்பகுதி டிஎப்ஓ நேரு, தித்திமத்தி ஏசிஎப் கோபால், ஊமங்கலா ஆர்எப்ஓ அரவிந்த் உட்பட 50க்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.

The post புலியை பிடிக்க தேடுதல் வேட்டை appeared first on Dinakaran.

Tags : Kodagu ,Srimangala Hobli ,Virajpet ,Virajpet Assembly Constituency ,MLA ,A.S. Ponnanna ,
× RELATED குடும்ப தகராறில் விபரீதம் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி கைது