புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கொரோனா தடுப்பூசிகளால் எந்தவித பயன்களும் கிடையாது. அது பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு நடவடிக்கையுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘‘கோவிட் தடுப்பூசி மட்டும் இல்லாவிட்டால் அது எதுபோன்ற பக்கவிளைவுகளை நமக்கு ஏற்படுத்தி இருக்கும் என்பதை மனுதாரர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். எனவே முகாந்திரம் இல்லாத இந்த மனுவை விசாரிக்க முடியாது’’ என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
The post கொரோனா தடுப்பூசிக்கு எதிரான வழக்கு டிஸ்மிஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.