×

மகாராஷ்டிரா மாஜி அமைச்சர் பாபா சித்திக் மகனையும் கொல்ல திட்டம்: 3வது குற்றவாளி சிக்கினார்

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மகனையும் கொல்ல திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது. மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், பாபா சித்திக். இவரது மகன் ஜீஷன் சித்திக், பாந்திரா காங்கிரஸ் எம்எல்ஏ. கடந்த 12ம் தேதி இரவு அங்கு வந்த போது பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அரியானாவைச் சேர்ந்த குர்மாயில் பல்ஜித் சிங் (23), உத்தரபிரதேசத்தை சேர்ந்த தர்மராஜ் ராஜேன் காஷ்யப் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் 3வது நபரான பிரவீன் லோங்கர் என்பவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது சகோதரர் சுபம் லோன்கரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். அவர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், பாபா சித்திக் மட்டுமின்றி, அவரது மகன் எம்எல்ஏ ஜீஷன் சித்திக்கும் பிஷ்னோய் கும்பலின் ஹிட்-லிஸ்டில் இருப்பது தெரி யவந்துள்ளது.

The post மகாராஷ்டிரா மாஜி அமைச்சர் பாபா சித்திக் மகனையும் கொல்ல திட்டம்: 3வது குற்றவாளி சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,minister ,Baba Siddiqui ,Mumbai ,Former ,Nationalist Congress Party ,Deputy Chief Minister ,Ajit Pawar ,Jeeshan Siddique ,Bandra Congress MLA ,
× RELATED மகாராஷ்டிராவில் பரபரப்பு பஞ். தலைவர்...