×

எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு எல்ஐசி அலுவலகம் முன்பு முகவர்கள் சங்கங்கள் தலைவர்கள் ராஜேந்திரன் மற்றும் டில்லி ஆகியோர் தலைமையில் செங்கல்பட்டு கிளை எல்ஐசி முகவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், எல்ஐசி முகவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். முகவர்களின் உழைப்பினால் கிடைக்கும் வருவாயை தடுப்பதை நிறுத்த வேண்டும். கமிஷன் குறைப்பினை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். முகவர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

The post எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : LIC ,Chengalpattu ,Unions ,Presidents ,Rajendran ,Dilli ,Dinakaran ,
× RELATED வீட்டுக்குள்ளே வாகனங்களை ஏற்றி இறக்க...