×

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளிக்கரணை, வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

வேளச்சேரி: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பாக பள்ளிக்கரணை, வேளச்சேரி மேம்பாலத்தில் றிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் சென்னை வெள்ளத்தில் மூழ்குவது தொடர் கதையாகி வருகிறது. வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிகரணை, சோழிங்கநல்லூர், கீழ்கட்டளை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வேளச்சேரியில், சாலைகளில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி, போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

குடியிருப்புகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், வெள்ள நீரில் மூழ்கி பல லட்சம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதுபோன்ற மழை நேரங்களில் தங்களது கார்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, உயரமான பகுதிகளில் பார்க்கிங் செய்கின்றனர். இந்நிலையில் தற்போது ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதிகளவு மழை பெய்தால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து மீண்டும் பாதிப்படையும் என்பதால், பாலங்களில் கார்களை நேற்று குடியிருப்பு வாசிகள் பார்க்கிங் செய்து இடம் பிடிக்க தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில் வேளச்சேரி, ரயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலம், பள்ளிக்கரணை மேம்பாலத்தின் மீது ஏராளமான கார்கள் தற்போது பார்க்கிங் செய்து இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் வேளச்சேரி பாலத்தில் சிறிய அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கார்களை அங்கிருந்து எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறித்தினர். ஆனால் காரின் உரிமையாளர்கள் வாகனத்தை எடுக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து மேம்பாலத்தின் மீது நிறுத்தப்பட்ட கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். ஆனால் காரின் உரிமையாளர்கள் அபாரதம் விதித்தாலும் பரவாயில்லை கட்டிக்கொள்கிறோம் என்று கூறி வாகனத்தை எடுக்க மறுத்துவிட்டனர்.

The post கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளிக்கரணை, வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Pallikaranai ,Velachery ,Chennai ,Madipakkam ,Pallikarani ,Choshinganallur ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம்