×

உத்திரமேரூர் அருகே வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, வாடாநல்லூர் கிராமத்தில் ஸ்ரீராதா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நேற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களும் கோயில் வளாகத்தில் புண்யாவாசனம், வாஸ்துஹோமம், சாந்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து, நேற்று காலை 3ம் கால யாக வேள்வி பூஜை முடிந்தபின் மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின் மீது ஊற்றி, தீபாராதனை காண்பித்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி, கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post உத்திரமேரூர் அருகே வேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Venugopala Swamy Temple Kumbabhishekam ,Uttaramerur ,Sriratha Rukmani Sametha ,Srivenugopala Swamy Temple ,Vadanallur village ,Ashtabandana Maha ,Kumbabhishekam ,Venugopala Swamy Temple Kumbhabishekam ,Uthramerur ,
× RELATED செய்யாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக...