×

காஞ்சி மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இக்கல்லூரியில் தற்போது மருத்துவ வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில், இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவ – மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. மருத்துவ பல்கலைக்கழக இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர் தலைமை தாங்கினார். துணைவேந்தர் ஸ்ரீதர், இணை துணைவேந்தர் கிருத்திகா, பதிவாளர் சுரேகா வரலட்சுமி, டீன் ராஜசேகர், மருவக்கல்லூரி கண்காணிப்பாளர் பூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு, மருத்துவ படிப்பில் சேர்ந்த 230 முதலாமாண்டு மாணவ – மாணவிகளை வரவேற்று, மருத்துவ கல்லூரி சார்பில் மருத்துவர்களுக்கான வெள்ளைநிற கோட் வழங்கினர். பின்னர், மருத்துவ கல்விக்கான உறுதி மொழியை வாசிக்கச் செய்து, உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், மாணவ – மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சி மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Kanchi Meenakshi Medical College Hospital ,Kanchipuram ,Kanchipuram Meenakshi Medical College Hospital ,Meenakshi Medical College Hospital ,Enathur ,Kanchipuram, Chennai- ,Bangalore National Highway ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து...