ஸ்டாக்ஹோம் : 2024ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். அதன்படி மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
நடப்பு ஆண்டிற்கனான பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சைமன் ஜான்சன், டாரன் அசோமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய மூன்று வல்லுநர்களுக்கு இந்த வருடம் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
நாட்டை வடிவமைப்பதில் அமைப்புகளின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. பலவீனமான சட்டம் மற்றும் சுரண்டல் அதிகம் கொண்ட நாடுகள் பெரியளவில் வளர்ச்சியை அடையாது என்பதை அவர்களின் ஆய்வு நிரூபித்துள்ளது. ஒரு அமைப்பு எப்படி உருவாகின்றன. அவை எப்படி ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு காரணமாக இருக்கிறது. நிலையான வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் ஆகிவை குறித்து இவர்கள் விரிவான ஆய்வுகளை செய்துள்ளனர்.
The post 2024ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு.. யார் இவர்கள்? சாதித்தது என்ன! appeared first on Dinakaran.