- மும்பை
- யோர்க்
- தில்லி
- புது தில்லி
- நியூயார்க்
- டெல்லி விமான நிலையம்
- சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம்
- மும்பை, மகாராஷ்டிரா
புதுடெல்லி: மும்பையில் இருந்து நியூயார்க் புறப்பட்டு சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலால், அந்த விமானம் டெல்லி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 2 மணியளவில், நியூயார்க் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. அதையடுத்து அந்த விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
மேலும் பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அனைத்து விதமான சோதனைகளும் நடத்தப்பட்டன. ஆனால் குறிப்பிடும்படியாக வெடிகுண்டு ஏதும் இல்லாததால், வெடிகுண்டு புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து தாமதமாக புறப்பட்டது. மேற்கண்ட சம்பவம் குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
The post மும்பையில் இருந்து நியூயார்க் புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: டெல்லியில் அவசரமாக தரையிறக்கம் appeared first on Dinakaran.