சென்னை: வடகிழக்கு பருவழையை பொறுத்த வரையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று, நாளை, நாளை மறுநாள், மிக முதல் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 16-ம் தேதி சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்கள் சென்னயில் அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறை அலுவலகர்கள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் துனை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள், மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தை ஆலோசனை செய்தார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார். தூர்வாரும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் கேட்டறிந்தார்.
The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.