- நாதகிரி முருகன் கோவில்
- சிவகிரி
- மத்திய நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாட்டு பிரிவு பொறியாளர்
- திருவேங்கடராமலிங்கம்
- தின மலர்
சிவகிரி, அக்.11: பிரசித்தி பெற்ற நாதகிரி முருகன் கோயிலுக்கு செல்லும் பிரதான சாலை ₹2.4 கோடியில் இரு வழித்தடமாக அகலப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ள நிலையில் ெநடுஞ்சாலைத்துறை தரக்கட்டுபாட்டு கோட்ட பொறியாளர் திருவேங்கடராமலிங்கம் ஆய்வு செய்தார். உலக மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்கிணங்கவும், அதனை மக்களுக்கு போதிக்கும் வண்ணமாக கீரியும், பாம்பும் ஒருங்கே அமைந்து பால் அருந்தும் ஸ்தலமாகவும், எண்ணற்ற சித்தர்கள் மலைமேல் அமர்ந்து திருக்காட்சி கொடுக்கும் ஸ்தலமாக சிவகிரி அருகே பிரசித்தி பெற்ற நாதகிரி முருகன் கோயில் விளங்குகிறது. இக்கோயிலுக்கு கார்த்திகை பூஜையின் போது சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், மேல கரிசல்குளம், துரைச்சாமியாபுரம், ராயகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலுக்கு மேலகரிசல்குளத்தில் இருந்து கூடலூர் வரையிலான பிரதான சாலை ஒரு வழித்தடமாக இருப்பதால் ஒரு வாகனம் வந்தால் எதிரே வாகனத்துக்கு வழிவிடுவதில் சிரமம் உள்ளது.
எனவே இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மேல கரிசல்குளத்தில் இருந்து கூடலூர் வரைக்கு ₹2.4 கோடி மதிப்பில் இரு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது இப்பணி நிறைவடைந்துள்ளது. இதைதொடர்ந்து சாலையின் தரத்தினை தரக்கட்டுப்பாட்டு கோட்டப்பொறியாளர் திருவேங்கடராமலிங்கம் ஆய்வு செய்தார். உடன் சிவகிரி உட்கோட்ட பொறியாளர் சுரேஷ், உதவிப்பொறியாளர் பாலகணேஷ் மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவிப்பொறியாளர் கலைகண்ணதாசன் இருந்தனர்
The post பிரசித்தி பெற்ற நாதகிரி முருகன் கோயிலுக்கு செல்லும் பிரதான சாலை ₹2.4 கோடியில் இருவழித்தடமாக அகலப்படுத்தும் பணி நிறைவு appeared first on Dinakaran.