×
Saravana Stores

பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் வனவிலங்கு வார விழா

 

உடுமலை, அக்.14: உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படையின் சார்பாக வனவிலங்கு வார விழா மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார்.தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார். வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மனித இடையூறுகள் என்னும் தலைப்பில் ஆசிரியர் சுரேஷ்குமார் சிறப்புரையாற்றினார்.

ஓசோன் படல ஓட்டைகளும் மனித தவறுகளும் எனும் தலைப்பில் இயற்பியல் ஆசிரியர் ஜெகநாத ஆழ்வார்சாமி பேசினார்.அதனை தொடர்ந்து ஆசிரிய பெருமக்கள் சுற்றுச்சூழல் குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.தேசிய பசுமை படை மற்றும் என்.எஸ்.எஸ் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தினர். மாணவ மாணவிகள் வன விலங்குகளை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஓசோன் படலத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அறிந்து கொண்டனர். முதுகலை கணித ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

The post பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் வனவிலங்கு வார விழா appeared first on Dinakaran.

Tags : Wildlife Week Festival ,Govt High School ,Phoolanginara ,Udumalai ,wildlife ,National Green Force ,Phoolanginaru Government Higher Secondary School ,Headmaster ,Ganesan ,National Green ,Force ,Coordinator ,Saravanan ,Phoolanginaru Government High School ,Dinakaran ,
× RELATED கடவூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு...