- அரசு மேல்நிலைப்பள்ளி
- காரைக்குடி
- கல்லல் விசாலயங்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
- முதல்வர்
- சுந்தரம்பால்
- திமுக
- கல்லல் கரு அசோகன்
- யூனியன் கமிட்டி
- தின மலர்
காரைக்குடி, அக்.14: காரைக்குடி அருகே கல்லல் விசாலயன்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் சுந்தராம்பாள் வரவேற்றார். திமுக பொதுக்குழு உறுப்பினர் கல்லல் கரு.அசோகன் முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு சேர்மன் சொர்ணம் அசோகன் தலைமை வகித்து சைக்கிள்களை வழங்கி பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து திட்டங்களும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற கொள்கையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார்.
அனைத்து துறையும் சீரான வளர்ச்சி பாதையில் செல்வதால் தமிழகம் மாற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக வளர்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்கும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதல்வர் சிறப்பான திட்டங்களை கொண்டு அதனை உடனடியாக செயல்படுத்தியும் வருகிறார். மாணவர்களின் திறன்களை மேம்படுத்த நான் முதல்வன் திட்டம், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு என இல்லம் தேடி கல்வி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்து செயல்படுகிறார்.
முதல்வரின் அறிவிப்பால் தமிழகம் கல்வி வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை விட முன்னேறி வருகிறது. கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வரவேண்டும் என்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டு தற்போது மிக தரமான சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்றார். பெற்றோர்கள் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கல் appeared first on Dinakaran.