- விஸ்வபிரம்ம மக்கள் பேரவை இயக்கம்
- யூனியன்
- அமைச்சர்
- அறந்தாங்கி
- தமிழ்
- தமிழ்நாடு
- மத்திய அமைச்சர்
- நிர்மலா சீதாராமன்
- அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம்
- மாநில தலைவர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- விஸ்வா
- பிரம்மா மக்கள்
- சட்டசபை இயக்கம்
- மாரி சிங்கராம்
- விஸ்வ பிரம்மா மக்கள் பேரவை இயக்கம்
அறந்தாங்கி, அக்.14: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து தமிழ்நாடு விஸ்வபிரம்ம மக்கள் பேரவை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விஸ்வ பிரம்ம மக்கள் பேரவை இயக்கத்தின் மாநில தலைவர் மாரி.சிங்காரம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒன்றிய அமைச்சர் கோவையில் விஸ்வபிரம்ம தொழிலை பிற தொழில்களுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார்.
ஒன்றிய அமைச்சரின் இந்த பேச்சு விஸ்வபிரம்ம தொழில் செய்பவர்கர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஒன்றிய அமைச்சர் மன்னிப்புகோர வேண்டும் என கோஷம் எழுப்பினர். முன்னதாக பட்டுகோட்டை சாலையில் ஒன்றிய அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆர்பாட்டத்தில் மாநில அவைத் தலைவர், ராஜு மாவட்ட ஒருங்கிணைப்பு அமைப்பு செயலாளர் செல்வகுமார், மாவட்ட தலைவர் தெற்கு பிரபாகரன், மாவட்ட செயலாளர் தெற்கு சரவணன், கௌரவத் தலைவர் மருதமுத்து, ரவி, நித்யானந்தம் பரவக்கோட்டை, கீரமங்கலம், மேற்பனைக்காடு, குலக்குடி உள்ளிட்ட கிளை பொறுப்பாளர்கள், அறந்தாங்கி ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய அமைச்சரை கண்டித்து விஸ்வபிரம்ம மக்கள் பேரவை இயக்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.