சூரத்: டெல்லியை தொடர்ந்து குஜராத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான 518 கிலோ கொகைன் போதைப் பொருள் சிக்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிக மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கடந்த 2ம் தேதி, தெற்கு டெல்லி மெக்ராலி பகுதியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலை பிடித்த போலீசார் அவர்களிடமிருந்து 560 கிலோ கொகைன் என்ற போதை பொருளையும், நீரில் விளைவிக்கப்படக் கூடிய உயர் வகை கஞ்சா 40 கிலோவையும் பறிமுதல் செய்தனர்.
இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.5,620 கோடி. அதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி டெல்லியில் கடை ஒன்றில் 208 கிலோ கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2400 கோடி. இந்நிலையில், டெல்லி, குஜராத் போலீசார் இணைந்து குஜராத்தின் அங்லேஷ்பூரில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 518 கிலோ கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.5,000 கோடி என போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post டெல்லியை தொடர்ந்து குஜராத்தில் ரூ.5,000 கோடி போதை பொருள் சிக்கியது appeared first on Dinakaran.