- வங்காள விரிகுடா
- சென்னை
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- வங்காள தெற்கு விரிகுடா
- Ranipettai
- திருவண்ணாமலை
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
- தின மலர்
சென்னை: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு 16ம் தேதி ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி 48 மணி நேரத்தில் நகரும் என்பதால் மிக அதிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை 2 நாட்களில் விலகும் நிலையில், 15 மற்றும் 16ம் தேதிகளில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், அக்டோபர் 1ம் தேதிமுதல் நேற்று வரை 66 சதவீதம் இயல்பைவிட கூடுதலாக தமிழகத்தில் பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழையால் அனேக இடங்களில், குறிப்பாக வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. மேலும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில், தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று, தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்புள்ளது. அது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி 48 மணி நேரத்தில் நகரக் கூடும்.
15ம் தேதியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.16ம் தேதியில் வட தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும்.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்டங்கள் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்றும், நாளையும் வீசக் கூடும். வடதமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கிமீ வேகத்திலும், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா,குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்திலும் 16 மற்றும் 17ம் தேதிகளில் வீசக் கூடும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
The post வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது: சென்னைக்கு 16ம் தேதி ரெட் அலர்ட்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் அதிகனமழை எச்சரிக்கை: : சென்னை வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.