×
Saravana Stores

சென்னை, திருவள்ளூர் உள்பட 22 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 16ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 11ம் தேதி மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதி, நேற்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலைகொண்டிருந்தது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. இதன்காரணமாக, இன்று மற்றும் நாளை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

The post சென்னை, திருவள்ளூர் உள்பட 22 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallur ,Bangka Sea ,Tamil Nadu ,Chennai Meteorological Centre ,Middle East Arabian Sea ,
× RELATED முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரை பணி தொடரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்