- மகாராஷ்டிரா
- துணை முதலமைச்சர்
- அஜித் பவார்
- மும்பை
- ஷாயாஜி ஷிண்டே
- தேசியவாத கட்சி
- Bharatiyar
- துணை முதல்வர் அஜித் பவார்
மும்பை: அஜித் பவார் தலைமையிலான தேசியவாத கட்சியில் பாரதியார் வேடத்தில் நடித்த ஷாயாஜி ஷிண்டே இணைந்தார். தமிழில் பாரதியார் திரைப்படத்தில் பாரதியாராக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாயாஜி ஷிண்டே. இவர் வேலாயுதம், வேட்டைக்காரன், ஒருகல் ஒரு கண்ணாடி, ஆதவன், தூள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் மகாராஷ்டிரா சட்ப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், துணை முதல்வர் அஜித் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு பகுதி மாவட்டமான சதாராவில் பிறந்த ஷாயாஜி ஷிண்டே அங்கு விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் கட்சியில் இணைந்த தமிழ் நடிகர் appeared first on Dinakaran.