×

மயிலாடும்பாறை அருகே இ-சேவை மைய கட்டிடம் செயல்பாட்டிற்கு வருமா?: முத்தாலம்பாறை மக்கள் எதிர்பார்ப்பு

வருசநாடு: மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இ-சேவை மையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு விட்டது. ஆனால், எந்த ஒரு பயன்பாடும் இன்றி உள்ளது. இதனால் முதியவர்கள் பணம் பணம் எடுப்பதற்காக பல கிராமங்களில் இருந்து தங்கம்மாள்புரம் மற்றும் வருசநாடு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இப்பகுதிகளில் புதிய கட்டப்பட்டுள்ள இ-சேவை மைய கட்டிடத்தில், முதியோர் உதவித் தொகையை கொடுப்பதற்கு ஊராட்சி நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இ சேவை மைய பொறுப்பாளரிடம் கேட்டபோது, நெட்வொர்க் பிரச்னை அதிக அளவில் உள்ளது. அதனால் தான் முத்தாலம்பாறை பகுதியில் பொதுமக்களுக்கு தங்கம்மாள்புரம் பகுதிகளில் வைத்து பணம் கொடுத்து வருகிறோம். எனவே, புதிய செல் கோபுரம் அமைத்தால் இது போன்ற பணிகள்  தடை ஏற்படாமல் நடைபெறும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கூறியதாவது: இ-சேவை மைய பணியாளர்கள் அவ்வப்போது வந்து செல்கிறார்கள். திடீரென டவர் பிரச்னை வந்து விடுகிறது. எனவே, தங்கம்மாள்புரம் வருசநாடு பகுதியில் பணம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது. இதற்கு மாற்றுவழி செய்திட புதிய பிஎஸ்என்எல் செல்போன் டவர்  அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்….

The post மயிலாடும்பாறை அருகே இ-சேவை மைய கட்டிடம் செயல்பாட்டிற்கு வருமா?: முத்தாலம்பாறை மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladumpara ,Muthalamparai ,Varusanadu ,Muthalambara ,Mayiladumparai ,Dinakaran ,
× RELATED மயிலாடும்பாறை பகுதியில் வெட்டி அழிக்கப்படும் தென்னை மரங்கள்