×

சித்தா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு: வருகிற 17ம் தேதி சென்னையில் தொடக்கம்

சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 17ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி பட்டப்படிப்புகளுக்கு 2024-25ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் இணையதளத்தில் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 27ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
இதன்படி, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 4,558 பேரும், 7.5 சதவிகித இடங்களுக்கு 1,321 பேரும், அகில இந்திய இதுக்கீட்டு இடங்களுக்கு 1,460 பேரும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,428 பேரும் என மொத்தம் 8,797 மாணவ – மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 8,397 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே தகுதியுடையதாக ஏற்கப்பட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் முடிந்து தகுதியான மாணவ – மாணவியரின் தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்தில் வரும் 17ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 18ம் தேதி முதல் 22ம் தேதிவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 24ம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குமான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

The post சித்தா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு: வருகிற 17ம் தேதி சென்னையில் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Siddha ,Unani ,Chennai ,Health Department ,
× RELATED சித்த மருத்துவம் பற்றி விழிப்புணர்வு முகாம்