×
Saravana Stores

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. விழாவின் நிறைவாக சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. தீர்த்தவாரிக்கு பின் கோயில் தெப்பக்குளத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆந்திர அரசு சார்பில் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு காணிக்கையாக வழங்கினார்.

அன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் 4 மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முக்கிய நிகழ்வாக 8-ம் தேதி இரவு கருட சேவை நடைபெற்றது.

11ம் தேதி காலை மகா ரதம் எனப்படும் தேரோட்டம் நடைபெற்றது. அன்றிரவு குதிரை வாகனத்தில் சுவாமி உற்சவம் நடைபெற்றது. இன்று காலை புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடைபெறும். அன்றைய தினம் கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Thirupathi Elumalayan Temple Brahmorsavam Completion ,Tirupathi ,Thirupathi Elumalayan Temple Brahmorsavam ,Chakarathalwar Thirthwari ,Tirthwari ,Thirumalai ,Tirupathi Eummalayan Temple ,Brahmorashavam ,
× RELATED மலையில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக...