திருச்சி: தொழில் நுட்பக் கோளாறு காரணமாக வானில் பல மணி நேரம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு மாலை 5.40க்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் திருச்சியில் தரையிறக்க விமானிகள் முயற்சிக்கின்றனர். ஆனால் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் வானத்திலேயே 2 மணிநேரமாக வட்டமிட்டது.
இந்நிலையில் நிலத்திலிருந்து 4,255 அடி உயரத்தில் வட்டமடித்துக்கொண்டிருந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. 8.15 மணிக்கு விமானத்தை தரையிறக்க உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் விமானி டேனியல் பெலிசோ விமானத்தை பத்திரமாக இயக்கி வெற்றிகரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கினார். தரையிறங்கும்போது விமானத்தில் புகை வந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். ஆனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
The post தொழில் நுட்பக் கோளாறு காரணமாக வானில் பல மணி நேரம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது appeared first on Dinakaran.