×

மஞ்சூர் அரசு மகளிர் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரை, கோலப்போட்டி

மஞ்சூர்: மஞ்சூர் அரசு மகளிர் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரை, கோலப்போட்டி நத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் குந்தா வருவாய்த்துறை சார்பில் மஞ்சூர் மகாகவி பாரதியார் நினைவு அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது. குந்தா தாசில்தார் கலைச்செல்வி தலைமை தாங்கினார்.

தலைமையாசிரியர் பாபி, ஓவிய ஆசிரியர் சகாய்தாஸ், வாரலாறு ஆசிரியர் கிரண் ஆகியோர் மாணவிகளுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்கள். இதை தொடர்ந்து மாணவிகளுக்கிடையே வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரை, கவிதை, பேச்சு மற்றும் கோலப்போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

The post மஞ்சூர் அரசு மகளிர் பள்ளியில் வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரை, கோலப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Manchurian Government Women's School ,Kolapoti ,Manjoor ,Golapoti ,Manjoor Mahagavi Bharatihar Memorial Government Women's High School ,Kunda Revenue ,Nilgiri District ,Kunda ,
× RELATED விபத்துகளை தடுக்கும் வகையில் மஞ்சூர்...