×
Saravana Stores

ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாஜவுக்கு மக்கள் கொடுத்த பதிலடி

 

கும்பகோணம், அக்.11: ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாஜவின் மாநில அங்கீகாரத்திற்கு எதிராக மக்கள் கொடுத்த பதிலடி என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் இந்திய இறையாண்மையின் வெற்றிக்கான அடித்தளமாக அமைந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு ஜனநாயக ரீதியாக மக்கள் வழங்கி இருக்கும் தகுந்த பதிலடி. அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கும் ஒவ்வொருவரும் எதிர்பார்த்திருந்த முடிவை அம்மாநில மக்கள் உறுதி செய்து இருக்கிறார்கள். ஹரியானா மாநிலத்தை பொருத்தவரை இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டு இருக்க வேண்டும். இந்தியா கூட்டணி கட்சிகள் தங்கள் அரசியல் சுய லாபங்களுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத் தேவை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் எழுச்சி புது நம்பிக்கையை வழங்கி இருக்கிறது. அதன் வாக்கு வங்கி அதிகரிப்பு இந்தியா கூட்டணியின் எதிர்காலத்திற்கு புது உத்வேகத்தை வழங்கியிருக்கிறது. பிளவுவாத அரசியலை தவிர்த்து ஒற்றுமையுடன் முன்னேற இந்த தேர்தல் முடிவுகள் வழி வகுத்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாஜவுக்கு மக்கள் கொடுத்த பதிலடி appeared first on Dinakaran.

Tags : Jammu ,and Kashmir election ,BJP ,Kumbakonam ,Humanity People's Party ,Papanasam ,MLA ,Jawahirullah ,Jammu and Kashmir ,and Kashmir ,
× RELATED ஜம்மு நீதிமன்றத்தில் குண்டு வீச்சு