×

நாகர்கோவில் அருகே மினி டெம்போ, கார் மோதல்

நாகர்கோவில், அக். 11: நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு நோக்கி ஒரு மினிடெம்போ சென்று கொண்டு இருந்தது. மினிடெம்போ நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த கார், மினிடெம்போ மீது மோதியதாக கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் மினிடெம்போ சாலையில் கவிழ்ந்தது. கார் சாலையோரம் இறங்கி நின்றது. இந்த விபத்தில் மினிடெம்போ டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றார். இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post நாகர்கோவில் அருகே மினி டெம்போ, கார் மோதல் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kavalkinar ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில்...