- கோபுர
- காரைக்குடி
- கோபுர கலசங்கள்
- காரைக்குடி விநாயகர்
- கோவில்
- விநாயகர் கோயில்
- காரைக்குடி நகரம்
- சிவகங்கை மாவட்டம்
- Kumbabhishekam
காரைக்குடி: காரைக்குடி விநாயகர் கோயிலில் கோபுர கலசங்களை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரின் மையப் பகுதியில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று கடந்த மாதம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் அர்ச்சகர் நேற்று இரவு 8.30 மணியளவில் வழக்கம்போல கோயிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை திரும்பி வந்து பார்த்தபோது கோயில் கோபுரத்தில் இருந்து 7 கலசங்கள் திருடுபோனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அந்த கலசங்களின் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.
இது குறித்த தகவலின்பேரில், காரைக்குடி வடக்கு போலீசார் கோயிலுக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். காரைக்குடி நகரின் மைய பகுதி கோயிலில் கலசங்கள் திருடுபோனது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post காரைக்குடி கோயிலில் கோபுர கலசம் திருட்டு: மர்மநபர்களுக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.