×

ஒரே நாடு ஒரே தேர்தல்: கேரள சட்டப்பேரவையில் எதிர்ப்பு தீர்மானம்

திருவனந்தபுரம்: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தகர்த்துவிடும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

 

The post ஒரே நாடு ஒரே தேர்தல்: கேரள சட்டப்பேரவையில் எதிர்ப்பு தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala Assembly ,
× RELATED சபரிமலை அப்பம் – சோதனை செய்த அதிகாரிகள்