×

முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஜே.ஆர்.சி சார்பில் புயல், வெள்ளம், வறட்சி போன்றவற்றை தாங்கி பனை மரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியரும் ஜே.ஆர்.சி. ஒருங்கிணைப்பாளருமாகிய இரா.முருகேசன் தலைமை வகித்தார்.

இதில் கடந்த மாதங்களில் ஜே.ஆர்.சி. மாணவர்களால் சேகரிக்கப்பட்டு எடுத்து வரப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பனை விதைகளை குன்னலூர் – எக்கல் சாலையில் நடப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். இதில் ஆசிரியர்கள் தமிழரசி, உதயா, பாரதி, கருணாநிதி, ஜெயந்தி, காவியா, பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்தில் பனை விதை நடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kunnalur village ,Muthuppet ,JRC ,Gunnalur Panchayat Union Middle School ,Muthupet, Tiruvarur district ,
× RELATED மழையால் பாதித்த நெற்பயிருக்கு...