- ஜவஹர்லால் நேரு
- தஞ்சாவூர்
- மாவட்ட கலெக்டர்
- பிரியங்கா பங்கஜம்
- தமிழ் அபிவிருத்தி திணைக்களம்
- தமிழ்நாடு அரசு
- தமிழ் மேம்பாட்டுத் துறை
தஞ்சாவூர், அக். 10: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப்போட்டி மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையில், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி தனித்தனியே நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, நவம்பர் திங்கள் 14ம் நாள் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்குத் தனித்தனியே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 29.10.2024 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டிகள் தனித்தனியே நடத்தப்பெற உள்ளன.
The post ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி appeared first on Dinakaran.