- நவராத்தி திருவிழா
- தேவி
- கருமாரியம்மன்
- உதயர்பாளையம்
- தேவி கருமாரியம்மன் கோவில்
- காமாட்சி அம்மன் கோயில் தெரு, உடையார்பாளையம், அரியலூர் மாவட்டம்
- தேவி கருமாரியம்மன்
- நவராத்திரி
- வடியர்பாளையம்
ஜெயங்கொண்டம், அக். 10: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவின் 4-ம் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்றது. முன்னதாக தேவி கருமாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர்,இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்பட பல் வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வஸ்த்திரம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது உடையார்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசித்தனர்.
The post உடையார்பாளையத்தில் நவராத்திரி விழா தேவி கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.