- நலத்திட்டம்
- மயிலாடுதுறை
- அரசு
- பெண்கள் பள்ளி
- மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
- தலைமையாசிரியை
- சாந்தி
- நகர சபை
- ஜனாதிபதி
- மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம்
- செல்வராஜ்
- அரசு பெண்கள் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாம்
- தின மலர்
மயிலாடுதுறை, அக்.10: மயிலாடுதுறை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. தலைமை ஆசிரியை சாந்தி தலைமை தாங்கினார். நகர மன்றத் தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் செல்வராஜ் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் உதவி திட்ட அலுவலர் லீலாவதி வரவேற்புரை ஆற்றினார். திட்ட அலுவலர் ரோஜந்தி நாட்டு நலப் பணித் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல்முறைகள் பற்றி விளக்கினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளாக பள்ளி வளாகத் தூய்மைப்பணி, உழவாரப்பணி, துலா கட்ட தூய்மைப்பணி, போதை விழிப்புணர்வு பற்றிய பேரணி, மரக்கன்று நடுதல், துணிப்பையை பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.பின்னர், இயற்கை விவசாயப் பகுதிகளுக்கு மாணவிகளை அழைத்துச் சென்று டெல்டா மாவட்டத்திற்கே உரிய விவசாயத்தையும் விவசாய உற்பத்தி முறைகளையும் இயற்கை விவசாயி ராமலிங்கம் என்பவரால் மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முகாம் நிறைவில் சான்றிதழ்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
The post மயிலாடுதுறை அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் appeared first on Dinakaran.