சின்னமனூர், அக்.10: சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி கிராம ஊராட்சியில், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள இரண்டாவது வார்டு பகுதியில் உள்ள நூலகத் தெருவில், கழிவுநீர் கடப்பதற்கு வடிகால்கள் இல்லாமல் இருப்பதால், கழிவுநீர் அங்கேயே தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதியில் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் சாலை வசதி முறையாக இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகையால், இப்பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், கழிவுநீர் கடப்பதற்கு வாய்க்கால் வசதி செய்து தரவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சீலையம்பட்டியில் பேவர் பிளாக் பதிக்க கோரிக்கை appeared first on Dinakaran.