×
Saravana Stores

சர்வதேச முதியோர் தின விழா

சிவகங்கை, அக்.10:சிவகங்கை அருகே பி.குளத்துப்பட்டியில் ஜீ.என்.எஸ். ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் மற்றும் முதியோர் இல்லத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மகாலிங்கம் வரவேற்றார். பொதுச்செயலாளர் உறுமத்தான் முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மாவட்ட சமூக நலத்துறை கண்காணிப்பாளர் சொப்ணா முதியோர் நலன் பற்றி எடுத்துரைத்தார். தொடர்ந்து முதியோர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பாக முதியோர்கள் அனைவருக்கும் பரிசு பொருட்கள் மற்றும் சேலை, வேஷ்டி போன்ற உடைகள் வழங்கினர். இல்ல கண்காணிப்பாளர் அன்னலெட்சுமி நன்றி கூறினார்.

The post சர்வதேச முதியோர் தின விழா appeared first on Dinakaran.

Tags : International Day of Older Persons ,Sivagangai ,P. Kulathupatti ,Department of Social Welfare and Women's Rights ,Homeless ,Children ,Home ,Mahalingam ,General Secretary ,Urumathan ,International Day of Elderly ,
× RELATED ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்