நித்திரவிளை, அக். 10: கொல்லங்கோடு 2ம் வார்டிற்கு உட்பட்ட கிள்ளி குளத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிணறு அமைத்தால் அந்த பகுதியில் விவசாயம் பாதிக்கும் என்று கூறி, கிணறு வெட்ட எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை குளத்தின் கரையில் திரண்டனர். கிணறு வெட்ட வந்த பணியாளர்கள் பணியை நிறுத்தி சென்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கொல்லங்கோடு நகராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் ஷீஜா ராணி சார்பில் குடிநீர் கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய 15 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அது போல் நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் குடிநீர் கிணறு அமைக்கும் பணியை தொடங்க போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளார்.
The post குடிநீர் கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் appeared first on Dinakaran.