×

நடிகர்கள் மீது பலாத்கார புகார் கொடுத்ததால் எனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்: பிரபல நடிகை போலீசில் புகார்

திருவனந்தபுரம்: சமூக வலைதளங்களில் ஆபாசப் படங்களை பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்பட மலையாள சினிமா பிரபலங்கள் மீது பலாத்கார புகார் கூறிய நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஆலுவா சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகர்களான முகேஷ், ஜெயசூர்யா, டைரக்டர் பாலச்சந்திர மேனன் உள்பட 10க்கும் மேற்பட்ட மலையாள சினிமா பிரமுகர்கள் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எர்ணாகுளம் ஆலுவாவை சேர்ந்த நடிகை போலீசில் புகார் கொடுத்தார்.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நடிகை,ஆலுவா சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், முக்கிய நடிகர்கள் உள்பட சினிமா பிரபலங்கள் மீது பலாத்கார புகார் கொடுத்ததால் தன்னை பழி வாங்குவதற்காக தன்னுடைய ஆபாசப் படங்களை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அதைத்தொடர்ந்து ஆலுவா சைபர் கிரைம் போலீசார், நடிகையின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நடிகர்கள் மீது பலாத்கார புகார் கொடுத்ததால் எனது ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்: பிரபல நடிகை போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Mukesh ,Jayasuriya ,
× RELATED சபரிமலை அப்பம் – சோதனை செய்த அதிகாரிகள்