×

மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத வகையில் சென்னையில் மட்டும் 23,000 வீடுகள் உள்ளது; அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி!

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை வல்லுனர் குழுவினருடன் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பார்வையிட்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை உறுதி தன்மையை ஆய்வு செய்ய 5 வல்லுநர் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று (30.12.2021) மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜா முத்தையாபுரம், விசாலட்சி அம்மன் தோட்டம், பருவாநகர் திட்டப்பகுதிகளிலும் மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராணி அண்ணாநகர் திட்டப்பகுதியையும் வல்லுனர் குழு ஆய்வு செய்தது. இவ்வாய்வு குழுவினருடன் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் குடியிருப்புகளை பார்வையிட்டார். மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பின்னர் தெரிவிக்கையில்; தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை உறுதி தன்மையை ஆய்வு செய்ய 5 வல்லுநர் குழு தமிழக அரசு அமைத்துள்ளது.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கிட்டதட்ட 30 முதல் 40 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்றி விட்டு அதற்கு பதிலாக புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 23000 குடியிருப்புகள் சென்னையிலும், 2000 குடியிருப்புகள்  இதர பகுதிகளிலும் சிதிலமடைந்து வாழ்வதற்கே தகுதி  இல்லாத சூழ்நிலையில் உள்ளது.இவை அனைத்தும் இடித்து விட்டு புதிய குடியிருப்புகள் கட்டி அங்கு வாழ்ந்த குடும்பங்களுக்கே வழங்க வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். கடந்த சட்டமன்ற கூட்டதொடரில் முதற்கட்டமாக 7500 குடியிருப்புகள் கட்டுவதற்கு ரூபாய்.2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் முழு வீச்சில் இப்பணியினை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு துறை செயலாளர், வாரிய மேலாண்மை இயக்குநர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டப்பகுதிகளை நேரிடையாக சென்று ஆய்வு செய்து வருகிறோம். இப்பணிகள் விரைந்து நடைபெற நடவடிக்கைகள் முடிக்கி விடப்பட்டுள்ளது. சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்வதற்கு முன்னர், அக்குடியிருப்புகளில் வாழும் குடும்பங்கள் மாற்றிடங்களுக்கு குடிபெயரும் பொழுது, மறுகட்டுமான திட்டகாலங்களில் வெளியே வாடகை வீட்டில் வசிக்க கருணை தொகையாக கடந்த கால ஆட்சியில் ரூ.8000 வழங்கப்பட்டு வந்ததை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய் உள்ளதோடு, இத்தொகையினை ரூ.24,000 ஆக உயர்த்தி உள்ளார்கள். புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர ஏதுவாக திட்ட பகுதிகளில் குடியிருப்பவர்கள் தங்கள் வீடுகளை விரைவாக காலி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் திரு.ஹித்தேஷ் குமார் எஸ் மக்வானா, இ.ஆ.ப, மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்த ராவ் இ.ஆ.ப, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.மயிலை த.வேலு, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு..ஏ.எம்.வி. பிரபாகர ராஜா மற்றும் தலைமைப் பொறியாளர் திரு.இராம சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்….

The post மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத வகையில் சென்னையில் மட்டும் 23,000 வீடுகள் உள்ளது; அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister Tha.Mo.Anparasan ,Tamilnadu Urban Habitat Development Board ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...