காஞ்சிபுரம்: சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த, தொழிற்சாலையில் ஏசி, வாஷிங் மெஷின், டிவி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்க, 1500க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள் கடந்த மாதம் 9ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு, சங்க அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் இணைந்து இந்த பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இந்தக் குழுவினா் சாம்சங் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சாம்சங் இந்தியா சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இன்று காலை போராட்டக் களத்தில் கூடிய சாம்சங் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கொட்டும் மழையிலும் போராடி வந்த நிலையில், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சி.ஐ.டி.யு தலைவர் (சௌந்தரராஜன் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்
பிற்பகலில் விசாரணை
இதனிடையே, நேற்றிரவு தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆட்கொணர்வு மனுவை சிஐடியு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
The post போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது: காஞ்சிபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.