மதுரை, அக். 9: வெள்ளாளர் முதலியார் சேம்பர் ஆப் காமர்சின் பிசினஸ் கனெக்ட் அமைப்பு சார்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்காக அரசுகளின் தொழில் கடன் திட்டங்கள், மானியங்கள், வங்கி வட்டி மானியம், மின்சார மானியம், திட்ட மதிப்பீடு முறைகள், ஜெம் போர்டல், வேளாண் மற்றும் உணவுப்பொருள் ஏற்றுமதி, ஏற்றுமதி மானியம், புதிய தொழில் முனைவோருக்கான திட்டங்கள், புதிய தொழில்களின் உற்பத்தி தேவைகள், போன்ற பல்வேறு பிரிவுகளில் தொழில் முனைவோருக்கான விளக்க முகாம் நேற்று மதுரையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிசினஸ் கனெக்ட் சேர்மன் மகாலிங்கம் வரவேற்றார். இயக்குனர் ராமசாமி நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வெள்ளாளர் முதலியார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் இளங்கோவன், செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தனர். சிப்போ பொது மேலாளர் பழனிவேல் முருகன், எம்.எஸ்.எம்.இ., துணை இயக்குனர் ஜெய செல்வம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மண்டல மேலாளர் கார்த்திகேயன், டி.என்.ஏ.பி.இ.எக்ஸ்., சார்பில் அக்ரி அண்ட் புட் எக்ஸ்போர்ட் குறித்து கவிமுகில் சிவராஜன், இந்திய தொழில் மற்றும் ஊரக வளர்ச்சி துறை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் உள்ள தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் குறித்து பேசினர். பிசினஸ் கனெக்ட் செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
The post சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்காக மானியங்கள் குறித்த விளக்க முகாம் appeared first on Dinakaran.