மதுரை, அக். 9: ஒரே நாளில் ரூ.30 லட்சம் வரி வசூல் செய்த கிழக்கு ஒன்றிய பிடிஓ உள்ளிட்டோரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளில் நேற்று சிறப்பு வரி வசூல் முகாம் உதவி இயக்குநரால் (ஊராட்சிகள்) நடத்தப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்த்து ஒரே நாளில் ரூ.1.20 ேகாடி வசூலானது. இதில், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 36 கிராம ஊராட்சிகளில் இருந்து மொத்தமாக ரூ.30 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது. இது மாவட்டத்திலேயே அதிகபட்ச வசூல் என்பதால் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது. இதையடுத்து மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்(கிஊ) ஜோதிராஜ் மற்றும் அவரது குழுவினரை நேரில் அழைத்து கலெக்டர் சங்கீதா பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
The post வரி வசூலில் கிழக்கு ஒன்றியம் சாதனை கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.