- எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு
- மனிதன்
- செயின்
- ராமநாதபுரம்
- மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு
- கலெக்டர்
- சிம்ரன்ஜீத் சிங் காலன்
- ராமநாதபுரம் அரண்மனை
- எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி
- தின மலர்
ராமநாதபுரம், அக்.9: ராமநாதபுரத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு துறையின் மூலம் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை தலைமை வகித்தார். ராமநாதபுரம் அரண்மனை முன்பு எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அரண்மனையில் இருந்து தொடங்கிய பேரணியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்று எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர். நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜீன்குமார், சுகாதார ஆய்வாளர் தினேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், சுகாதாரத் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி appeared first on Dinakaran.