- பொள்ளாச்சி கால்நடைச் சந்தை
- பொள்ளாச்சி
- ஆந்திரா
- கேரளா
- பொல்லாச்சி சந்தை
- பொல்லாச்சி நகராட்சி
- கோயம்புத்தூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சந்தைக்கு ஆந்திர மாடுகள் வரத்து அதிகரித்து, கேரளா வியாபாரிகள் வருகையும் அதிகமாக இருந்ததால், ரூ.1.80 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தை செவ்வாய்கிழமைதோறும் நடக்கிறது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. கடந்த 2 வாரமாக ஆந்திர மாடுகள் வரத்து இல்லாமல், சந்தையின் ஒரு பகுதி வெறிச்சோடியது. மேலும் கடந்த சில வாரங்களாக கேரளா வியாபாரிகள் வருகையும் குறைவாக இருந்ததால், விற்பனையும் மந்தமாக நடந்தது.
இந்நிலையில், பொள்ளாச்சியில் இன்று நடந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திர மாநில மாடுகள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது. மேலும் சில வாரத்திற்கு பிறகு கேரளா வியாபாரிகள் வருகையும் அதிகரிப்பால் மாடு விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. இதனால், கூடுதல் விலைக்கு மாடுகள் விற்பனையானது. இதில் பசு மாடு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும், நாட்டு காளை மாடு ரூ.38 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலும், கன்று குட்டி ரூ.18 ஆயிரம் வரை என கடந்த மாதத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனையாகியுள்ளது. இன்று மாட்டு சந்தையில் ரூ.1.80 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ஆந்திரா மாடுகள் வரத்து அதிகரிப்பு: பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.1.80 கோடிக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.