டெல்லி: மக்களவை தேர்தல் முடிவை போல சட்டமன்ற தேர்தல் முடிவையும் அறிவிப்பதில் தாமதம் செய்வதாக ஜெய்ராம் ரமேஷ் புகார் அளித்துள்ளார். ஹரியாணா, ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஜம்மு – காஷ்மீரில் தொடக்கம் முதல் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், ஹரியாணாவில் தொடக்கத்தில் முன்னிலை பெற்ற காங்கிரஸ் தற்போது அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவை போல சட்டமன்ற தேர்தல் முடிவையும் அறிவிப்பதில் தாமதம் செய்வதாக ஜெய்ராம் ரமேஷ் புகார் அளித்துள்ளார்.
ஹரியானா தேர்தல் முடிவு தாமதமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் ஏன் தாமதிக்கிறது? காலை 9 மணி முதல் 11 மணி வரை எவ்வித விளக்கமும் இன்றி தாமதமாக முடிவுகள் பதிவேற்றப்படுகிறது. தேர்தல் முடிவை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட வேண்டும். தவறான தகவல்கள் பரவுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். உண்மையான முடிவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிட ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
The post தேர்தல் முடிவை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ் appeared first on Dinakaran.