கூடலூர், அக்.8: கூடலூரில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தநிலையில் உள்ளன. கூடலூர் பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டு முதல் போக அறுவடை துவங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையினால் வயல்களில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
இது குறித்து வேளாண்துறை அதிகாரியிடம் கேட்டபோது, மேற்பரப்பில் சாய்வதினால் அறுவடையில் பாதிப்பு இல்லை என்றும், விவசாயிகள் அறுவடை செய்ய தயாராக உள்ள வயல்களில் தண்ணீர் தேங்காமல் வெளியேற்ற வேண்டும் என்றும், இதனால் நெற்பயிர்கள் அழுகும் நிலையை தவிர்க்க முடியும் என்றும் கூறினர். முதல் போக அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழையினால் நெல் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
The post கூடலூரில் மழையால் சாய்ந்த நெற்பயிர்கள்: விவசாயிகள் கலக்கம் appeared first on Dinakaran.