×

கல்லூரிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி

 

திருச்சி, அக்.8: கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி திருச்சி, சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நான்கு நாட்கள் நடந்தது. 12 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் முதலில் விளையாடிய திருச்சி, சாரநாதன் பொறியியல் கல்லூரி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்தது.

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் உறுப்பு கல்லூரி-திருச்சி வளாகம் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் எடுத்தது. திருச்சி, சாரநாதன் பொறியியல் கல்லூரி 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதலிடம் பிடித்து சென்னை, அண்ணா பல்கலைக்கழக 13வது மண்டல மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் அணியாக திகழ்ந்து மண்டலங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

The post கல்லூரிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.

Tags : Inter College Cricket Tournament ,Trichy ,Saranathan Engineering College ,Inter-College Cricket Tournament ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு...