×
Saravana Stores

கொள்ளிடம் அருகே சந்தப்படுகை சாந்த முத்து மாரியம்மன் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை

 

கொள்ளிடம்,அக்.8: கொள்ளிடம் அருகே சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி கொலு பூஜையை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தபடுகை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சாந்தமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு வருடம் தோறும் நவராத்திரியை முன்னிட்டு 10 தினங்களும் சிறப்பு கொலுபூஜை நடைபெற்று அதில் மாணவிகளின் பரதநாட்டியம் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்று வருவது வழக்கம். அதேபோல நேற்று முன்தினம் இரவு இக்கோயிலில் நடைபெற்று வரும் கொலு பூஜையை யொட்டி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நடனப் பள்ளியில் நடன பயிற்சி பெற்ற பள்ளி மாணவிகள் இங்கு நடைபெற்ற அரங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர். மேலும் இங்கு நடனமாடிய பரதநாட்டிய மாணவிகள் விஜய லக்ஷனா, மகாலட்சுமி, அபி, யோகேஸ்வரி, சங்கமித்ரா, சண்முகப்பிரியா, ரூப, சரோமி, பரணிதா ஆகிய மாணவிகள் பரதநாட்டியம் ஆடி ஜக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு என்ற சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர்கள் ஆவர். இவர்களும் இந்த நடன நிகழ்ச்சிகள் பங்கு பெற்று ஆடினர். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிலிருந்தும் வந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கொள்ளிடம் அருகே சந்தப்படுகை சாந்த முத்து மாரியம்மன் கோயிலில் நவராத்திரி கொலு பூஜை appeared first on Dinakaran.

Tags : Navratri Kolu Pooja ,Chanthamuthu Mariamman Temple ,Kollidam ,Navratri Kolu Puja ,Chandapadugai Shantha Muthumariamman temple ,Chanthapadugai village ,Mayiladuthurai district ,Chanthapadukai Shanta Muthu Mariamman Temple ,
× RELATED பிரதம மந்திரியின் கவுரவ நிதி உதவி...