×

சுற்றுலா பயணிகள் பஸ் மீது தாவி குதித்து ஏறிய சிறுத்தை: கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு: பன்னரகட்ட தேசிய உயிரியல் பூங்காவில் சபாரி பஸ் மீது சிறுத்தை ஒன்று தாவி குதித்து ஏறிய காட்சி சமூகவவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் சிலர் சபாரி வாகனத்தில் சுற்றிப்பார்க்க சென்றனர். அப்போது திடீரென ஒரு சிறுத்தை பஸ் மீது தாவி குதித்து ஜன்னல் கண்ணாடியை கால்களால் அடித்தது. பின்னர் அப்படியே பஸ்சின் மேற்கூரை மீது ஏறியது. இதனால் சுற்றுலா பயணிகள் பதற்றம் அடைந்தனர். பின்னர் அந்த சம்பவத்தை செல்போனில் படம் பிடித்தனர். பஸ்ஸை டிரைவர் மெதுவாக இயக்கியதை தொடர்ந்து சிறுத்தை கீழே குதித்து வழக்கமான தனது இருப்பிடத்துக்கு சென்று விட்டது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், சபாரி பஸ் ஜன்னல் கதவுகள் இரும்பு கம்பிகளால் பின்னப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை’ என்றனர்.

The post சுற்றுலா பயணிகள் பஸ் மீது தாவி குதித்து ஏறிய சிறுத்தை: கர்நாடகாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka Bengaluru ,Pannaragat National Zoo ,Bengaluru ,Bannerghatta Zoo ,
× RELATED ஒசூர் அருகே கார் மோதி 2 தொழிலாளர்கள் பலி