×
Saravana Stores

தேசிய தொழிற் பழகுநர் முகாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.  செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு, பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம் வரும் 14ம் தேதி செங்கல்பட்டு, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயின்று, தேர்வில் தேர்ச்சி பெற்ற பல்வேறு தொழிற்பிரிவை சார்ந்த பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு, தொழிற்பழகுநர் பயிற்சியில் இணைந்து, மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என்ஏசி சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் சலுகையும் உள்ளது. எனவே, மாணவ, மாணவியர்கள் இம்முகாமில் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், மேற்காணும் பொருள் தொடர்பான விவரங்களை அறிந்துக் கொள்ள செங்கல்பட்டு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ dadskillcpt@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ 63790 90205, 044-2742 6554 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உரிய விவரங்களைப் பெற்றுக் கொள்ள தெரிவிப்பதுடன், பிரதம மந்திரி தொழிற்பழகுநர் முகாமில் கலந்து கொள்ள இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post தேசிய தொழிற் பழகுநர் முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : National ,Industrialists' ,Camp ,Chengalpattu ,Collector ,Arunraj ,National Industry ,District ,
× RELATED தேசிய ஒற்றுமை நாளையொட்டி ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’